என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
Enpodu komgodaamai ivaimaarb- ilanga Erudheri Elai yudane
Ponbodhi matha maalai punalsoodi vandhen Ulame pugundha adhanaal
Onbadhodu onrod- Elu padhinettod- aarum Udanaaya naalgal avaidhaam
Anbodu nalla nalla avai Nalla nallaAdiyaaravarkku migave. 02
எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், ஒன்பதாவதுவிண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையேசெய்யும்!
Lord Shiva has entered my heart, wearing bones, horns and tortoise skin on His chest, riding on a bull, along with Uma and wearing His favourite flower, "Oomathai" on His hair. This being so, none of the days beginning with inauspecious stars like Ayilyam, Magam, Visakam, Kettai and Thiruvadhirai can affect my actions in anyway. The same applies to all those who are devotees of Lord Shiva.
In Vedic astrology, there are 27 nakshatras, which are divisions of the zodiac. These nakshatras, also known as lunar mansions, are used to determine the positions of celestial bodies, particularly the Moon, and play a significant role in astrological calculations and predictions.
Here's a list of the 27 nakshatras:
- Ashwini
- Bharani
- Krittika
- Rohini
- Mrigashira
- Ardra
- Punarvasu
- Pushya
- Ashlesha
- Magha
- Purva Phalguni
- Uttara Phalguni
- Hasta
- Chitra
- Swati
- Vishakha
- Anuradha
- Jyeshtha
- Mula
- Purva Ashadha
- Uttara Ashadha
- Shravana
- Dhanishtha
- Shatabhishak
- Purva Bhadrapada
- Uttara Bhadrapada
- Revati
In the above series, Bharani, Karthikai, Pooram, Pooradam and Poorattadhi (muppooram) also are not good for travel as per Jyothisha sastra..
In the above two stanzas, Gnana Sambandhar tries to counter Appar Swamigal, when the latter tries to persuade the child not to travel to Madurai (as there was a risk of threat from the smanar people). Appar tries to prevent the travel saying that the days and stars are not good for travel.
Verse 3

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
Uruvalar pavalameni olineeru anindhu Umaiyodum vellai vidaimel
Murugalar konrai thingal mudimel anindhen Ulame poogundha adhanaal
Thirumagal kalaiya thoordhi seyamaadhu poomi Thisaidheyvam aana palavum
Arunedhi nalla nalla avai Nalla nalla Adiyaaravarkku migave. 03
பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன்முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையேசெய்வர்.
Lord Shiva has entered my heart, shining like a coral bead, wearing Veebhuti brightly on His forehead, riding on the bull, with Uma Devi by His side. The Lord is wearing beautiful Konrai flower and the Moon on His head. This being so, all the deities including Lakshmi, Saraswathi, Durga, Boomi Devi and Directional dieties will offer boons to me. The same applies to all those who are devotees of Lord Shiva.
Verse 4

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
Mathinuthal mangaiyodu vadabaal irundhu Maraiyodhum engal paraman
Nadhiyodu konrai maalai mudimel anindhen Ulame pugundha adhanaal
Kodhiyuru kaalan angi namanodu thoodhar Kodu noygalaana palavum
Adhiguna nalla nalla avai Nalla nalla Adiyaaravarkku migave. 04
பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின் கீழ் இருந்து (வடம் =ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்துதங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிகநல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
Lord Shiva has entered my mind, accompanied by Uma, who has a bright forehead like the crescent moon. He is the one who bestowed us with the Holy Vedas, from under a Banyan tree. He is wearing Konrai flower as garland and wears Ganga on His head. This being so, the ever aggressive Time, Fire, Lord Yama and his men and the diseases which badly afflict mankind cannot harm me in anyway and will be kind to me. The same applies to all those who are devotees of Lord Shiva.
Verse 5

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
Nansani kandan endhai madavaal thanodum Vidaiyerum nangal paraman
Thunsirul vani konrai mudimel anindhen Ulame pugundha adhanaal
Vensina avunarodum urumidiyum minum Migaiyaana poodham avaiyum
Ansidu nalla nalla avai Nalla nalla Adiyaaravarkku migave. 05
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னி மலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
My father, Lord Shiva, along with Mother Uma on the Rishabha (bull), has entered my heart, blue throated (due to Halahala poison during Samudramandan). He is the Supreme Being, who wears black Vanni and Konrai flowers on His head. This being so, Even the angry demons, the deafenning Thunder, flashing lightning, the troublesome five elements (Ether, Air, Fire, Water and Earth) will be afraid to trouble me. The same applies to all those who are devotees of Lord Shiva.
Verse 6
வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
Vaalvariya thaladhaadai varigova Nathar Madavaal thanodum udanaay
Naanmalar vanigonrai nadhisoodi vandhen Ulame pugundha adhanaal
Kolari uluvaiyodu kolaiyaanai gelal Kodu naaga modu karadi
Aalari nalla nalla avai Nalla nalla Adiyaaravarkku migave. 06
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
Lord Shiva has entered my mind with Mother Uma, wearing the brightly stripped tiger's skin, adorned with fresh Vanni leaves, konrai flower, and wearing the holy Ganges on his hair. This being so, I will not be attacked by wild animals like the Tiger, angry Elephant, Lion, Boar, Bear, and the Snake, who will all be kind to me. The same applies to all those who are devotees of Lord Shiva.
Verse 7
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
Seppilamulainan mangai orupaaga maagaVidaiyeru selvan adaivaar
Oppila madhiyum appumudi mel anindhen Ulame pugundha adhanaal
Veppodu kulirum vaadham migaiyaana pithum Vinaiyaana vandhu naliyaa
Appadi nalla nalla avai Nalla nalla Adiyaaravarkku migave. 07
உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம், அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை அடியவர்களுக்கு நல்லனவே செய்யும்.
The illustrious Lord Shiva has entered my mind, in Artha-Nari form, riding on Nandi bull, wearing the Moon and Ganges on His head. This being so, I will not suffer from the consequences of fever, cold, paralysis, digestive disorders, etc. The same applies to all those who are devotees of Lord Shiva.
Verse 8